மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐநா.வில் தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

நியூயார்க்: மியான்மரி்ல் கடந்த பிப்ரிவரியில் ஜனநாயக ரீதியான அரசை கவிழ்த்து விட்டு, புரட்சியின் மூலம் ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆட்சியை ஒப்படைத்து விட்டு விலகும்படி மியான்மர் ராணுவத்தை வலியுறுத்தும் தீர்மானம், ஐநா.வில் நேற்று கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உட்பட 36 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. பெலாரஸ் நாடு மட்டும் எதிர்த்து வாக்களித்தது. இது பற்றி ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறுகையில், ‘‘ மியான்மரின் அண்டை நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமல் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதை இந்தியாவால் ஏற்க முடியாது. இந்த தீர்மானத்தால் இப்போதைக்கு எந்த பலனும் ஏற்படாது,’’ என்றார்.

Related Stories: