சில்லி பாயின்ட்...

* யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் டி பிரிவில் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. இதே பிரிவில் குரோஷியா - செக் குடியரசு இடையே நடந்த போட்டியும் டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த ஈ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவை வீழ்த்தியது.

* கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரில்  சிலி - பொலிவியா அணிகள் மோதிய ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு ஏ பிரிவு ஆட்டத்தில் அர்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது. சிலி, அர்ஜென்டினா அணிகளுக்கு இதுதான் முதல் வெற்றியாகும். இந்த 2 அணிகளும் மோதிய முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது.

* இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சாதனை கோஹ்லி வசமாகி உள்ளது. எம்.எஸ்.தோனியுடன் சமநிலையில் இருந்த அவர், நேற்று நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் களமிறங்கியதன் மூலமாக (61வது டெஸ்ட்) முதலிடத்துக்கு முன்னேறினார். சர்வதேச அளவில் தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித் (109 டெஸ்ட்), ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (93 டெஸ்ட்) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

* மறைந்த தடகள நட்சத்திரம் மில்கா சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் கோஹ்லி மற்றும் இந்திய வீரர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கினர்.

Related Stories: