கொரோனாவால் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை சரியாக வழங்குக: தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பற்றிய முழுமையான விவரங்களை மருத்துவமனைகள் வழங்க வேண்டும் என தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் அனுப்பி வைத்திருக்கும் சுற்றறிக்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயர், விலாசம், வயது மற்றும் பிற தகவல்களை மருத்துவமனை நிர்வாகங்கள் முறையாக பதிவு செய்து அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை முறையாக பதிவிடாததால் அவர்களது உறவினர்களுக்கு இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களை பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அரசு பலமுறை எடுத்துரைத்தும் மருத்துவமனை நிர்வாகங்கள் முறையாக பின்பற்றுவதில்லை என்றும் எனவே மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக தலையிட்டு கொரோனாவால் உயிரிழப்போரின் விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களை தமதமில்லாமல் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>