முகாம்களுக்கு வெளியே உள்ள அகதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டம்: முதலமைச்சர் தொடக்கி வைப்பு

சென்னை: முகாம்களுக்கு வெளியே உள்ள இலங்கை தமிழ் அகதிகள் குடும்பத்தினருக்கு 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் குடும்பத்தினர் 5 பேருக்கு மு.க.ஸ்டாலின் தலா 4,000 ரூபாய் வழங்கினார். அப்போது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முகாம்களுக்கு வெளியே தங்கி இருப்பவர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி தந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் முகாம்களுக்கு வெளியே இருக்கும் 13,553 இலங்கை தமிழ் குடும்பத்தினருக்கு 5 கோடியே 42 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

Related Stories:

>