யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து-ஸ்காட்லாந்து போட்டி டிரா: ரசிகர்கள் ஏமாற்றம்

கிளாஸ்கோ: 16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த இ’பிரிவு லீக் ஆட்டம்  சுவீடன்-ஸ்லோவாகியா அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் வெற்றி பெற்றது. தொடர்ந்து கிளாஸ்கோவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டி பிரிவில் குரோஷியா- செக்குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில், டி பிரிவில் இங்கிலாந்து- ஸ்கார்ட்லாந்து அணிகள் மோதின.  வலுவான இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் அளித்த ஸ்கார்ட்லாந்து அணியினர், கோல் முயற்சிகளை முறியடித்தனர்.

 கடைசிவரை போராடியும் இருஅணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி கோல்கள் இன்றி  டிராவில் முடிந்தது. இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் இரீஸ் ஜேம்ஸ், லூக் ஷா  உள்ளிட்டவர்கள் இருந்தும் ஒருகோல் கூட அடிக்காமல் டிராவில் முடிந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரத்தில் போட்டி டிராவில் முடிந்தாலும் ,ஸ்கார்ட்லாந்து ரசிகர்கள் தங்கள் அணி வெற்றி பெற்றதாகவே நினைத்து கொண்டாடினர். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு  எப் பிரிவில் ஹங்கேரி-பிரான்ஸ் , இரவு 9.30 மணிக்கு எப் பிரிவில் போர்ச்சுகல்- ஜெர்மனி, நள்ளிரவு 12.30 மணிக்கு இ  பிரிவில் ஸ்பெயின்-போலந்து அணிகள் மோதுகின்றன.

Related Stories:

>