×

ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த முறைமாப்பிள்ளை

திருமலை: தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டம், உட்னூர் மண்டலம், கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். இவரது அத்தை மகள்கள் கான்பூரை சேர்ந்த உஷாராணி, ஷம்புகுடா கிராமத்தை சேர்ந்த சுரேகா. இந்நிலையில் வேலாடி அர்ஜூன், உஷாராணி, சுரேகா ஆகிய இருவரையும் ஒருவருக்கொருவர் தெரியாமல் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இளம்பெண்கள் இருவரையும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொள்வதாகவும், இருவரையும் காதலித்து வந்ததையும் தெரிவித்துள்ளார். இதற்கு இரண்டு பெண்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், இவர்களது பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், இது முறையானது அல்ல என ெதரிவித்துள்ளனர்.

ஆனால், இளம்பெண்களோ திருமணம் செய்து கொண்டால் வேலாடி அர்ஜூனை தான் திருமணம் செய்வோம் என்று ஒற்றைக்காலில் நின்றுள்ளனர். இதையடுத்து, திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட இளம்பெண்களின் பெற்றோர் கடந்த 14ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த 14ம் தேதி ஒரே மேடையில் பெரியோர்கள் முன்னிலையில் 2 இளம்பெண்களின் கழுத்தில் வேலாடி அர்ஜூன் தாலி கட்டி அவர்களை ஆதிவாசிகள் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஒரே மேடையில் இரண்டு இளம்பெண்களை வாலிபர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், ஆதிவாசிகள் வரலாற்றில் ஒரு பழங்குடியின ஆண் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது இதுவே முதல் முறை என்றும் உள்ளூர் வாசிகள் பேசிக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Thirumalai
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...