ஏழைகளுக்கு சலுகை விலையில் சிமெண்ட்!: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்..!!

சென்னை: ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தென்னிந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில், சிமெண்ட், கம்பி, ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி இரு தினங்களுக்கு முன்னர் கட்டுப்பான பொருட்களின் உற்பத்தியாளர்கள் உடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் விலையேற்றம் குறித்து தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 

அதில் கொரோனா 2வது அலையால் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறியுள்ளனர். 40 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கி வருவதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

Related Stories:

>