ஒன்றேகுலம் ஒருவனேதேவன் என்பதே திமுக-வின் தாரக மந்திரம்!: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு..!!

விழுப்புரம்: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தாரக மந்திரமாக கொண்டு திமுக ஆட்சி செயல்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் 262 அர்ச்சகர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார். 

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, ஒன்றேகுலம் ஒருவனேதேவன் என்பதே திமுக-வின் தாரக மந்திரம் என்றார். திமுக எப்போதும் யாரையும் வேறுபடுத்தி காட்டியது கிடையாது என்று கூறினார். அதேவழியில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

32 ஆண்டு காலம் நடைபெறாமல் இருந்த திருவாரூர் தேர் திருவிழாவை விமர்சியாக நடத்தியது கலைஞர் ஆட்சி என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கோவில்களில் பட்டியலினத்தவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ததும் கலைஞர் தான் என்று பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார். 

Related Stories:

>