இல்லம்தோறும் கழிவுநீர் இணைப்பு: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

அம்பத்தூர்: அம்பத்தூர் தொகுதியில் இல்லம்தோறும் கழிவுநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ துவக்கிவைத்தார். தமிழக அரசு சார்பில், அனைத்து கட்டிடங்களிலும் எவ்வித இடையூறுமின்றி கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்காக “இல்லம்தோறும் இணைப்பு” என்ற திட்டத்தின் மூலம் கழிவுநீர் இணைப்பு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தி சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட பகுதிகளான அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம், மடிப்பாக்கம், மதுரவாயல் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கட்டிடங்களும் கழிவுநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சென்னை குடிநீர் வாரியம் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தீர்மானித்துள்ளது.

இதன்படி அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கழிவுநீர் இணைப்பு பெற அனைத்து கட்டிடங்களையும் கண்டறியப்படுகிறது. முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, அம்பத்தூர் பகுதியில் “இல்லம்தோறும் இணைப்பு” திட்டத்தை அனைத்து கட்டிடங்களிலும் கழிவுநீர் இணைப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை குடிநீர் வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமசாமி, அம்பத்தூர் பகுதி பொறியாளர் குளிர்ந்தராஜா, துணை பகுதி பொறியாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: