மியான்மரில் 900 பேர் பலி வாங்கிய ராணுவ ஆட்சிக்கு ஐ.நா. கடும் கண்டனம் : அந்நாட்டிற்கு ஆயுதம் அனுப்ப தடை விதித்தது

மியான்மர்: மியான்மர் ராணுவ ஆட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அந்நாட்டிற்கு ஆயுதம் அனுப்ப தடை விதித்துள்ளது. நியூயார்க் நகரில் கூடிய ஐ.நா.சபை கூட்டத்தில் மியான்மரில் கடந்த பிப்ரவரியில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது குறித்து உறுப்பு நாட்டு பிரதிநிதிகள் கவலை தெரிவித்தன. ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மியான்மர் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்து அவர்கள் வேதனை தெரிவித்தனர்.ரோஹிங்கியா முஸ்லீம்கள் உயிருக்கு பயந்து அந்நாட்டில் இருந்து வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தது தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான வங்கதேச பிரதிநிதி கேட்டுக் கொண்டார்.

ஐ.நாவுக்கான பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பேசிய பிறகு மியான்மருக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 194 நாடுகளில் 119 நாட்டு பிரதிநிதிகள் ஆதரித்து வாக்களித்தனர். வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்ளிட்ட 36 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பெலாரஸ் மட்டும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு மியான்மரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ராணுவ புரட்சி வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>