தெலுங்கானாவில் விமானப்படை பயிற்சி முடித்த வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு!: போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் சாகசம்..!!

ஐதராபாத்: தெலுங்கானாவில் விமானப்படை பயிற்சி முடித்த வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் விமானங்களின் சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஹைதராபாத் அருகே உள்ள துண்டிக்கல் என்ற இடத்தில் உள்ள பயிற்சி அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்கவர் அணிவகுப்பில் பயிற்சி முடித்து செல்லும் வீரர்கள் பங்கேற்றனர். 

ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். இதை தொடர்ந்து, சிறு போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வான் சாகசங்களும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இந்நிகழ்ச்சியில் பேசிய விமானப்படையின் முதன்மை ஏர் மார்ஷல் பதாரியா, இந்திய விமானப்படையில் உள்ள மிக் 21 ரக போர் விமானங்கள் அடிக்கடி விபத்தை சந்திப்பது குறித்து கவலை தெரிவித்தார்.

 மிகவும் பழமையான மிக் 21 ரக போர் விமானங்கள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மாற்றப்பட்டு பிற போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து நடைபெற்று வரும் மிக் 21 ரக போர் விமானங்களின் விபத்துகள் துர்த்தாஷ்டவசமானவை என்று அவர் கூறியுள்ளார். 

Related Stories: