கரூரில் பலாப்பழம் விற்பனை மும்முரம்

கரூர் : கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பலாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலாப்பழங்கள் மொத்தமாக கொண்டு வரப்பட்டு, வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முக்கனிகளில் ஒன்றாக உள்ள இந்த பலாப்பழத்தை கரூர் நகர மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதால் இந்த முறையும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, பழங்களின் அளவுக்கு ஏற்ப, பொதுமக்களும், சில்லரை வியாபாரிகளும் பலாப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். கரூர் நகரை பொறுத்தவரை குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே இந்த பழங்கள் விற்பனை செய்யப்படும் என்பதால் மக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Related Stories:

>