அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் நீராதாரத்தை அழிக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சியில் எங்கு நோக்கிலும் சீமை கருவேல முட்கள் காடு போல வளர்ந்துள்ளது. நங்காஞ்சி ஆற்றில் . நீராதாரத்தை அழிக்கும் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியில் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள நிலங்கள், ஊருக்குள் முக்கிய தெருவோரங்கள் மற்றும் நங்காஞ்சி ஆறு உள்ளிட்ட வறண்ட நீர் நிலைகள் என்று எங்கு நோக்கினும் சீமை கருவேல முட்கள் வளர்ந்துள்னை.

அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் நங்காஞ்சி ஆற்றின் கரையோரம் காடு போல வளர்ந்துள்ள சீமை கருவேல முட்புதர்களில் மழை நீர் தேங்கி ஏரளாளமான கொசு உற்பத்தியாகி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றது. அரவக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை புங்கம்பாடி சாலை நங்காஞ்சி பலத்திற்கு மேற்கு கரையில் உள்ளது.

மருத்துவமனையின் பின்புறம் நங்காஞ்சி ஆற்றில் எங்கு பார்த்தாலும் சீமைகருவேல முட்புதர்கள் மண்டி நங்காஞ்சி ஆறே தெரியாத அளவிற்கு சீமைகருவேல மரங்கள் வளர்ந்து ஆறு ஓடை போல காணப் படுகின்றது. இதனால் மழைநீர்,சாக்கடை மற்றும் கழிவு நீர் அனைத்தும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நோய் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள் கொசுக்கடியினால் அவதிப்படுகின்றனர்.

நங்காஞ்சி ஆற்றில் கருவேலமரங்கள் காடு போல வளர்ந்து அதிக அளவு முட்புதர்களாக உள்ளதால் அப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயக் கிணறுகள், வீடுகளிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்டவைகளின் ஆற்றில் காடு போல் வளர்ந்துள்ள கருவேல மரங்களின் வேர்கள் பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஆதாரங்களை அழிக்கின்றன. இதனால் இப்பகுதியில் எதிர் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள முருங்கை உள்ளிட்ட விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்றும் இப்பகுதி விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரங்களை வேருடன் முற்றிலுமாக அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஆற்றோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாக ஆறு பாதுகாக்கப்படுவதுடன், வெள்ளக் காலங்களில் எவ்வித பயமும் இல்லாமலும் இருக்கும். சுற்றுப் பகுதி நிலத்தடி நீர் மட்டமும் உயர்வதுடன் சுற்றுச்சூழலும் காப்பாற்றப்படும் என பொதுநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆகையால் அரவக்குறிச்சி பகுதியில் நங்காஞ்சி ஆறு மற்றும் ஊருக்குள் வளர்ந்துள்ள சீமைகருவேல முட்புதர்ககளை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>