உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு!: கங்கை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கங்கை உள்ளிட்ட ஆறுகளில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அலகாந்தா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ரிஜிகேஷ் அமைந்துள்ள கங்கை நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று மந்தாகினி, பிந்தர் ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தவுலிகங்கா ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

கனமழை காரணமாக சமோலி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது. உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பருவமழை தொடங்க வேண்டிய ஜூன் 22ம் தேதிக்கு முன்னதாகவே கனமழை கொட்ட ஆரம்பித்ததால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: