கடலூரில் 5 ஹைட்ரோகார்பன் கிணறுகள்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம்

கடலூர் :கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வராத பகுதிகளை அந்நிறுவனம் குறிவைத்துள்ளது தெரியவந்துள்ளது. அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுக்க 2004ம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் உரிமம் பெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் 10 ஆய்வுக் கிணறுகளையும், கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் 5 ஆய்வுக் கிணறுகளையும் அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இந்த வார தொடக்கத்தில் விண்ணப்பித்து இருந்தது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, குறிஞ்சிப்பாடியை ஒட்டிய 5 இடங்களில் பஎண்ணெய் கிணறு ஆய்விற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் 237 பக்க அறிக்கையில் 5 இடங்களை குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளது.ஜூன் 15ம் தேதி ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்தது தற்போது தெரிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழ் மூன்றாம் கட்ட ஏலத்தில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அந்த ஏலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கிடையில் ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

Related Stories: