தனி விமானம் மூலம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்; 3 வாரங்கள் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் 3 வாரம் தங்கியிருந்து தனது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்கிறார். அமெரிக்காவில் 2-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த ரஜினி உடல்நிலையை பரிசோதித்து கொள்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். 

இருப்பினும் அவ்வப்போது அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சிகிச்சைக்குப் பிறகு 3 வாரங்கள் தங்கி ஓய்வு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 3 வார சிகிச்சைக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் தமிழகம் திரும்ப உள்ளார். 

Related Stories:

>