ஆந்திராவில் பயங்கரம்!: காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்த காதலன்... சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்..!!

கடப்பா: காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை சுற்றிவளைத்து தாக்கிய கிராமமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சித்தலசெருவு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஷாவை அதே பகுதியில் வசிக்கும் சரண் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

சரணின் காதலை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த சரண், தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை அறிந்த கிராமமக்கள் சரணை பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசாரிடம் சரணை ஒப்படைத்தனர்.

ஸ்ரீஷாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பத்வேல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சரண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories:

>