யூரோ கால்பந்து ஆஸ்திரியாவை வீழ்த்தியது நெதர்லாந்து

ஆம்ஸ்டர்டாம்: யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் சி பிரிவில், ஆஸ்திரியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நெதர்லாந்து அணி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஜோகன் க்ருயிப் அரங்கில் நடந்த இப்போட்டியில், 11வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் நெதர்லாந்து வீரர் டலிஸ்மான் பெம்பிஸ் டெபே அபாரமாக கோல் போட்டார். 2வது பாதியில் டென்ஸெல் டம்பிரைஸ் (67வது நிமிடம்) கோல் அடிக்க, நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.அந்த அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிப்பதுடன், கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்தது. கடைசி லீக் ஆட்டத்தில் வடக்கு மேசிடோனியா அணியுடன் திங்களன்று மோதுகிறது.  

இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மேசிடோனியா அணியை வீழ்த்தியது. பி பிரிவில் டென்மார்க் அணியுடன் மோதிய பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தது.

Related Stories:

>