சொல்லிட்டாங்க...

மக்களுக்காக உருவாக்கப்பட்ட வங்கி முறையையே குழிதோண்டி புதைத்துவிட்டு,  பெரும் பணக்காரர்களுக்கான வங்கிகளாக மாற்றுவதே மோடி அரசின் திட்டம். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை தமிழகம் எதிர்க்காமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

விவசாயிகள் போராட்டம் அமைதியாக நடந்தால் ஆட்சேபனை இல்லை. சட்டம்- ஒழுங்கு மோசமடைய அரியானா அரசு அனுமதிக்காது.  - அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் புதுச்சேரியில் அனைத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் வழங்க முயற்சி நடக்கிறது. - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

Related Stories:

>