போலி நகையை அடகு வைத்து 1.38 லட்சம் நூதன மோசடி: நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்

பெரம்பூர்: சென்னை எம்கேபி நகரில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிபவர் கவிதா (41). இவர் நேற்று வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர், கடந்த 12 வருடங்களாக எங்களது பைனான்ஸ் கம்பெனியில் கணக்கு வைத்துள்ளார். இவர், கடந்த மார்ச்  மாதம் 26 கிராம் தங்கத்தை எங்களிடம் அடகு வைத்து 83 ஆயிரம் பெற்று சென்றார். அதன் பிறகு அவரது மனைவி ஹேமாவதி கடந்த ஏப்ரல் மாதம், 17 கிராம் தங்க நகையை அடமானம் வைத்து 55 ஆயிரம் பெற்றுச் சென்றார். அவர்கள் அடகு வைத்த நகைகளை பரிசோதித்தபோது, தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகை என்பது தெரியவந்தது.

 எனவே, போலி நகைகளை அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் சரவணகுமார் நாம் தமிழர் கட்சியில் பெரம்பூர்  தொகுதி செயலாளராக உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: