ஜூடோ மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ்அப், இ-மெயிலில் புகார் அளிக்கலாம்: போலீசார் அறிவிப்பு

சென்னை: அண்ணாநகர், ஹை இம்பேக்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்கூல் ஜூடோ மாஸ்டர் கெபிராஜ் மீது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.

மேலும் கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரோ அல்லது குற்றச்சாட்டோ இருந்தால் atccbcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ அல்லது வாட்ஸ்அப் எண் 94981 43691 வாயிலாகவோ அல்லது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகம், எண் 220, பாந்தியன் ரோடு, எழும்பூர், சென்னை- 600 008 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, கட்டுப்பாட்டு அறை எண் 044-2851 3500, பேக்ஸ் நம்பர் 044-2851 2510 புகார் அளிக்கலாம்.

Related Stories:

>