10ம் வகுப்பு மாணவர்கள் சான்றிதழில் மதிப்பெண்கள் இடம்பெற வேண்டும்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட மாட்டாது என்றும், தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் அண்மையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த 10ம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் இருப்பது எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு மாணவர்களிடம் நிலவுகிறது. எனவே, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அனைவரிடமும் கலந்தாலோசித்து ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி 10ம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: