×

கர்நாடகா மாநிலத்தில் பாஜகவுக்குள் தொடரும் குழப்பம்: பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்வாரா எடியூரப்பா?

கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சிக்குள் சுழட்சி அடிக்கும் அரசியல் புயல் எடியூரப்பா தலைமையிலான அரசு நீடிக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சிக்குள் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜகவுக்குள் வீசும் அரசியல் புயலை கட்டுக்குள் கொண்டு வர கர்நாடக பாஜவுக்கான மேலிட பொறுப்பாளர் அருண் சிங் பெங்களூருவில் முகாமிட்டுள்ளார். கர்நாடகாவில் எடியூரப்பா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அணிகள் என பாஜக பிளவுப்பட்டு நிற்கிறது. அரசியல் குழப்பம் காரணமாக சொந்த கட்சி எம்எல்ஏக்களின் தொலைபேசி உரையாடல்களையே எடியூரப்பா அரசு ஒட்டுக்கேப்பதாகவும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கோடிக்கணக்கான ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எடியூரப்பா பதவி விலகுவதை தவிர வேறு அந்த சமரசத்தையும் ஏற்க முடியாது என அதிருப்தியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு எடியூரப்பா மகன் விஜயேந்திரா நேரடியாக உத்தரவுகள் பிறப்பிப்பதாகவும் அவர்கள் சாட்டியுள்ளனர். முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை எடியூரப்பா இழந்துவிட்டார் என்றும் எனவே கண்ணியமான முறையில் அவர் பதவி விலக வேண்டும் என்பதே தங்களது என்றும் பாஜக மேலவை உறுப்பினர் விஸ்வநாத் தெரிவித்துள்ளார். எடியூரப்பா ஆதரவு முகாமில் இருப்பவர்களோ முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்தால் அது கட்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும் என கூறி வருகின்றனர்.

விஸ்வநாத் உள்ளிட்டோர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தியுள்ள எடியூரப்பா கர்நாடகாவில் அரசியல் குழப்பம் எதுவுமில்லை என கூறியுள்ளார்.  இதனிடையே பாஜகவுக்குள் நடக்கும் சண்டை காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. உடனடியாக ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறை படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும்  முன்னாள் முதல்வருமான சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவில் சந்தித்துள்ள பின்னடைவையே கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் வெளிப்படுத்துவதாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 2012-ம் ஆண்டு பாஜகவில் இருந்து வெளியேறிய எடியூரப்பா கர்நாடக ஜனதா பக் ஷா என்ற என்ற கட்சியை உருவாக்கி பாஜகவுக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்தார். எடியூரப்பாவின் தனிக்கட்சி காரணமாக பாஜக சுமார் 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்ததுடன் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு உருவாக்கவும் வழி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Karnataka ,Bhāgawa ,Edurepa , Continuing turmoil within the BJP in the state of Karnataka: Will Eduyurappa complete his entire term?
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!