இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து பொருட்களின் விற்பனை கடந்த ஓராண்டில் மட்டும் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து பொருட்களின் விற்பனை கடந்த ஓராண்டில் மட்டும் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து பொருட்களின் விற்பனையை அதிகரித்துள்ளது. ரெம்டெசிவிர், ஃபவிபிரவிர், அஷித்ரோமைசின், உள்ளிட்ட மருந்து பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை மருந்து மற்றும் வேதிப் பொருட்களுக்கான அகில இந்திய அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 மே மாதம் வரையிலான காலத்தில் ஃபவிபிரவிர் மருந்து 1,200 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகியுள்ளது. இதே காலத்தில் ரெம்டெசிவிர் மருந்து 883 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கப்பட்டுள்ளது. அஷித்ரோமைசின் மருந்து கடந்த ஆண்டை விட 38 விழுக்காடு அதிகமாகி அதாவது 992 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. டாக்ஸிசைக்கிளின் மருந்து 85 கோடி ரூபாய் அளவுக்கு அதாவது முந்தைய ஆண்டை விட 3 மடங்கு அதிகமாக விற்பனையாகியுள்ளது. ஐவர்மெக்டின் மருந்தின் விற்பனை 10 மடங்கு அதிகரித்து 237 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் விட்டமின் உள்ளிட்ட மருந்து பொருட்கள் 14,587 கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 விழுக்காடு அதிகமாகும். குறிப்பாக விட்டமின் டி மருந்து பொருட்கள் மட்டும் 817 கோடி ரூபாய் அளவுக்கு அதாவது 40% அதிகமாக விற்பனையாகியுள்ளது. ஷிங்க் மருந்து பொருட்கள் சுமார் மும்மடங்கு அதிகமாக அதாவது ரூ.183 கோடிக்கு ஓராண்டில் விற்பனையாகியுள்ளது ஆய்வில் தெரியவந்தது.

Related Stories: