இந்தியாவில் கொரோனா 3ம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது!: சுகாதார நிபுணர்கள் தகவல்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா 3ம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக கொரோனா 3ம் அலையின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்றே கருத்துக்கள் பரவின. இந்த நிலையில் கொரோனா 3ம் அலையின் தாக்கம் இந்தியாவில் எந்த அளவில் இருக்கும் என்பது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுகாதாரத்துறை நிபுணர்களிடம் கருத்து கேட்டது.

இதில் 85 சதவிகிதம் பேர் இந்தியாவில் கொரோனா 3ம் அலையின் தாக்கம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் 70 சதவிகிதம் பேர் 3ம் அலையின் தாக்கம் முதல் 2 அலைகளை விட குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 5 சதவிகிதம் பேருக்கு முழுமையாக போடப்பட்டிருக்கும் நிலையில் அதன் தாக்கமும் 2வது அலையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோன்று மூன்றில் இரண்டு பங்கு சுகாதாரத்துறை நிபுணர்கள், மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி அளிக்காததே இதற்கு காரணமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 

Related Stories: