வேலூர் மத்திய சிறை கைதிகள் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் சிறப்பு அங்காடி மூடல்

வேலூர் : வேலூர் மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு அங்காடி திடீரென மூடப்பட்டது. வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் கைதிகளை கொண்டு பல ஏக்கர் பரப்பளவில் காய்கறிகள் பயிரிடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கைதிகள் போலீசாருக்கான பெல்ட், ஷூ, ரெடிமேட் சட்டை உள்ளிட்டவற்றையும் தயார் செய்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆண்கள் சிறை வளாகம் அருகே நன்னடத்தை கைதிகளுக்கான பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. இங்கு சுழற்சி முறையில் கைதிகள் பணிபுரிந்து வருகின்றனர். அதன் அருகே கைதிகளால் நடத்தப்படும் ஆவின் பாலகம், சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை அங்காடி திறக்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு மேலாகியும், சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு அங்காடியில் புதிதாக எந்ததொரு பொருட்களையும் விற்பனைக்கு வைக்கவில்லை. இதனால் இந்த சிறப்பு அங்காடி வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு, எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பு அங்காடியில் விற்பனை இல்லாத காரணத்தில் சிறப்பு அங்காடி திடீரென மூடப்பட்டது. தற்போது, வேலூர் மத்திய சிறையில் சிறைகள் பேக்கரி மூலம் கேக், பிரட், பிஸ்கெட் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் வருவாய் அதிகமாக கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Related Stories: