இளம்பெண் பலாத்காரம்: 2 பேர் கைது

கோவை: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் கனகராஜ்(26) இவரது மனைவி ரம்யா(21)(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. இருவரும் நாகேந்திரன் என்பவர் மூலம் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் பகுதியில் தறிபட்டறை தடத்தி வரும் மொய்தீன் குட்டி(31) என்பவரிடம் வேலைக்காக கடந்த 30 நாட்கள் முன் சேர்ந்தனர். ஊரடங்கு என்பதால் பட்டறை வீட்டிலேயே கணவன் மனைவி இருவரையும் மொய்தீன் குட்டி தங்க வைத்தார். இந்நிலையில் கனகராஜ் அந்த பகுதியில் உள்ள மில் ஒன்றுக்கு கடந்த 5ம் தேதி வேலைக்கு சென்று விட்டார்.

அப்போது பகலில் வீட்டில் தனியாக இருந்த ரம்யாவை மிரட்டி மொய்தீன்குட்டி அவரது நண்பர்கள் சமீர்,  ஷிகாபுதீன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதே போல் 7ம் தேதியும் மிரட்டி ரம்யாவை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இது குறித்து ரம்யா கணவரிடம் கூறியதை தொடர்ந்து அவரது புகாரின் அடிப்படையில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சமீர் (28) ஷிகாபுதீன் (29) இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மொய்தீன்குட்டியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>