பெண்ணிடம் பாலியல் சீண்டல்: 3 வாலிபர்கள் கைது

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஷீலா (40). இவரது கணவர் பரசுராமன் இறந்துவிட்டார். இவர்களுக்கு வர்ஷா என்ற மகளும், வருண் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக ஷீலா சென்றுள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 வாலிபர்கள், ஷீலாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அவர் கூச்சல் போட்டதால் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து திருப்போரூர் போலீசில் ஷீலா புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குப்ப்பதிவு செய்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கண்ணகப்பட்டு பகுதியை சேர்ந்த கரண் (22), கார்த்திக் (25), அஜய் (22), ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>