வடகொரியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம் : ஒரு வாழைப்பழம் ரூ. 500க்கு விற்கப்படுவதால் பட்டினியில் வாடும் மக்கள்!!

பியாங்யாங் : வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவில் கடந்த ஓர் ஆண்டாக அடிக்கடி சூறாவளி மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடையால் வடகொரியாவில் 15 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விலை வாசியும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு வாழைப்பழம் சுமார் ரூ. 500க்கு விற்கப்படுகிறது.

அந்நாட்டு மக்களும் பணம் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ள கிம் ஜாங் உற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற விவசாய துறையினர் தவறிவிட்டதாக விமர்சித்துள்ளார். தற்சார்போடு இருப்பதாக கூறி கொண்டு தனது எல்லைகளை மூடிக் கொண்ட வடகொரியா தற்போது அதற்கான விளைவுகளை சந்தித்து வருகிறது.

Related Stories: