பாமக நிர்வாகிகளை சமூக ஊடகங்களில் விமர்சிப்போர் மீது கடும் நடவடிக்கை: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒரே குடும்பமாக பழகி வருபவர்கள். அண்மைக்காலமாக பாமக மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கு தலைதூக்க தொடங்கியுள்ளது. ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் எதிரான இப்போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.அத்தகைய ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவர்.

Related Stories:

>