ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்: இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு கடந்த 2019ம் ஆண்டு ஒரு உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளினால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அதன் ஆய்வு அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் வரை எந்தவிதமான ஆய்வுப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று நான் முதலமைச்சராக இருந்தபோது உத்தரவிட்டிருந்தேன்.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று வெளிவந்த ஒரு செய்தியில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிய வருகிறது.அதிமுக ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி நிறுவனமோ அல்லது இதுபோன்ற இதர எண்ணெய் நிறுவனங்களோ, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கவில்லை. அதுபோல், முதல்வரும் அரியலூர் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு எதிரான ஓ.என்.ஜி.சின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு, அரசின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

Related Stories:

>