ஆளுநருடன் மோதல் குழந்தை என்றால் தாலாட்டலாம் வயதானவரை என்ன செய்வது? மேற்கு வங்க முதல்வர் மம்தா விரக்தி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தங்கார் கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்றார். பதவியேற்ற நாள் முதல், அவருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. எப்போதும் மோதல் நடந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார். 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார். இது தொடர்பாக முதல்வர் மம்தா நேற்று கூறுகையில், ``குழந்தைகளை தாலாட்டு பாடி சமாதானப்படுத்தி விடலாம். ஆனால், வயதானர்களை அமைதிப்படுத்த முடியாது. ஆளுநர் டெல்லி சென்ற விவகாரத்தை பொருத்தவரை, அமைதியாக இருப்பது நல்லது. பேசாமல் இருப்பது அதை விட நல்லது. ஆளுநர் ஜெகதீப் தங்காரை திரும்ப பெற்று கொள்ளும்படி, பிரதமர் மோடிக்கு 3 முறை கடிதம் எழுதி உள்ளேன்,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: