அறிமுகம் டங்க்லி அரைசதம் இங்கிலாந்து 396/9 டிக்ளேர்

பிரிஸ்டல்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்திருந்தது. ஹில் 35, பியூமான்ட் 66, கேப்டன் ஹீதர் நைட் 95, நதாலியே ஸ்கிவர் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அறிமுக வீராங்கனை சோபியா டங்க்லி 12, கேத்தரின் பிரன்ட் 7 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பிரன்ட் 8, எக்லெஸ்டோன் 17 ரன் எடுத்து வெளியேறினர். டங்க்லி  ஷ்ரப்சோல் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது. ஷ்ரப்சோல் 47 ரன் எடுத்து ராணா பந்துவீச்சில் கிளீன் போல்டாக, இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன் என்ற ஸ்கோருடன் (121.2 ஓவர்) டிக்ளேர் செய்தது. டங்க்லி 74 ரன்னுடன் (127 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 4, தீப்தி ஷர்மா 3, ஜுலன், பூஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

Related Stories: