தாய் உயிரிழந்ததால் துபாயில் சிக்கிக்கொண்ட 9 மாத குழந்தை: தன்னார்வலர்கள் உதவியோடு தமிழகம் கொண்டு வரப்பட்டது

சென்னை: கள்ளக்குறிச்சி சேர்ந்த வேலவன்,  இவரது மனைவி பாரதி இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்களில் மூத்த குழந்தை கிட்னி பாதிப்பு காரணமாக உயிர் இழந்து விட்டது. இந்நிலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக துபாய்க்கு தனது 3வது குழந்தையான 9 மாத தேவேஷ் என்ற குழந்தையோடு பணிப்பெண்ணாக  வேலைக்கு வந்தார்.

இந்நிலையில், இவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவர் துபாயிலேயே அடக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆதரவற்ற நிலைக்கு சென்ற குழந்தை துபாய் அரசின் பாதுகாப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் குழந்தையை தாயகத்திற்கு கொண்டு சேர்க்க இந்திய தூதரகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. துபாய் இந்திய துணை தூதரகம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு துபாய் திமுக அமைப்பாளர் மீரான் மூலம் தமிழக அரசை தொடர்புகொண்டு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

உடனடியாக இதற்கு உரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று துபாயிலிருந்து குழந்தைக்கு உதவியாக துபாய் மீரான் ஏற்பாடு செய்த தன்னார்வலர்  உதவியோடு திருச்சி விமான நிலையம் அழைத்துவரப்பட்ட குழந்தை அவரது தந்தை வேலவன் இடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தையை வேலவன் கண்ணீரோடு குழந்தையைப் பெற்று நன்றி தெரிவித்தார்.

Related Stories:

>