சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசி: 3 - 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பரிசோதிக்கும் அமீரகம்

அபுதாபி: சீனாவின் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசிகளை 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை ஐக்கிய அரபு அமீரகம் தொடங்கியது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 3 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சீனாவின் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தும் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 900 சிறுவர், சிறுமிகளுக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் 79% பேருக்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், 60 வயதைக் கடந்த 80% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே அமீரகத்தில் பொது நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பைஸர், சினோஃபார்ம், ஸ்புட்னிக்-வி போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அமீரகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

Related Stories: