வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகளுடன் ஐசியு வார்டு: கொரோனா 3வது அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை

வேலூர்,: கொரோனா 3வது அலையை சாமளிக்க வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகளுடன் ஐசியூ வார்டு தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக டீன் செல்வி ெதரிவித்தார். தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் தொற்று எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. அதேபோல், 2வது அலையில் உயிர்பலியும் அதிகளவில் இருந்தது. இதற்கிடையே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

அதேசமயம்,  கொரோனா 3வது அலை வந்தால், குழந்தைகளைத்தான் அதிகளவில் பாதிக்கும் என்று மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டு தயார்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குழந்தைகளுக்கு கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய ஐசியு வார்டு தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் செல்வி கூறுகையில், ‘வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

கொரோனா 3வது அலை வந்தால், அதிகளவில் குழந்தைகளை தாக்கக்கூடும். எனவே, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக 100 படுக்ைக வசதிகளுடன் குழந்தைகளுக்கு ஐசியு மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிறப்பு வார்டு தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. எனவே குழந்தைகள் உள்ள பெற்றோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’என்றார்.

Related Stories:

>