நீதிமன்றத்தை இழிவு படுத்திய விவகாரம்!: பாஜக -வை சேர்ந்த எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

சென்னை: உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய பாஜக -வை சேர்ந்த எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை திருமயம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிகை நகலை மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டது. 

அச்சமயம் விநாயகர் சதுர்த்தி மேடை அமைத்து பேச காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்த பாஜக -வை சேர்ந்த எச்.ராஜா போலீசை அவமதித்ததுடன் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. எச்.ராஜாவின் அவதூறு பேச்சு பற்றி திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. 

எச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட கோரி திமுக வழக்கறிஞர் துரைசாமி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது துரைசாமி மனுவை விசாரித்த நீதிமன்றம் எச்.ராஜா மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

Related Stories:

>