பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக சந்திப்பு..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பானது நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைநகர் டெல்லி சென்றார். பின்னர், டெல்லி வரும் முதல்வர்கள் தங்கும் தமிழக இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தார். 

அங்கு அவரை  தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீசார் அரசு மரியாதை அளித்தனர். இந்நிலையில் தமிழக இல்லத்தில் இருந்து புறப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். 

அங்கு பிரதமர் நரேந்திர மோடியால் தமிழக முதலமைச்சர் வரவேற்றப்பட்டார். இந்த சந்திப்பு என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சந்திப்பின் போது திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளரும், மாநில நீர்வளத்துறை அமைச்சராக இருக்கின்ற துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருக்கின்றனர். 

அதேபோல் தலைமை செயலாளர் இறையன்புவும் உடனிருக்கிறார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்பில் தமிழ்நாட்டு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவை ஸ்டாலின் அளிக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறார். 

ஜி.எஸ்.டி. மூலம் பெறப்பட்ட பணம் என்பது தமிழகத்திற்கு வழங்கப்படாமல் இருக்கிறது. அந்த பணத்தை உடனடியாக வழங்க நிதியமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வர் வைக்கவுள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு தமிழ்நாடு இல்லத்திற்கு நேரடியாக வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

அச்சமயம் பிரதமர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பின் போது எந்நெந்த விஷயங்கள் பரிமாறப்பட்டது. என்னென்ன விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடியிடம் வைத்தார்.

அதற்கு பிரதமரின் பதில் எந்த விதத்தில் இருந்தது என்பது பற்றி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமருடன் ஸ்டாலின் சந்தித்து பேசுவதால் இந்த சந்திப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: