ஈரோட்டில் தடுப்பூசிக்காக இரவு முழுவதும் காத்திருந்த மக்கள்!: குறிப்பிட்ட அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பலர் ஏமாற்றம்..!!

ஈரோடு: ஈரோட்டில் கொரோனா தடுப்பூசிக்காக இரவு முழுவதும் காத்திருந்த பொதுமக்களுக்கு காலையில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட அளவே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் பலர் ஏமாற்றம் அடைந்து திரும்பினர். ஈரோடு மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு 19,000 தடுப்பூசிகள் வரப்பெற்றதை தொடர்ந்து நேற்று மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. 

தற்போது ஈரோடு மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி கூடங்களில் 10 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி மையங்களில் நேற்று இரவு 9 மணி முதல் பொதுமக்கள் திரண்டு காத்திருந்தனர். இரவு முழுவதும் காத்திருந்தவர்களுக்கு காலை 6 மணிக்கு பிறகு டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இருப்பினும் குறிப்பிட்ட அளவே தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பல மணி நேரமாக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தும் சூழ்நிலை நிலவி வருகிறது. இத்தகைய நிலையில், மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: