நாட்டில் 9 முக்கிய நகரங்களில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: 91.6 சதவீத செயல்திறன் கொண்டது என ஆய்வில் தகவல் !

டெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.  இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், உள்நாட்டில் தயாரித்து விற்பனை செய்யவும் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டா டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக தடுப்பூசியை குறிப்பிட்ட அளவுக்கு இறக்குமதி செய்து, கடந்த மே 14ம் தேதி முதல் ஐதராபாத்தில் மட்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் புனே நகரில் செயல்பட்டு வரும் சீரம் இந்தியா அமைப்பின் சார்பில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரி, அதற்கு கடந்த 4ம் தேதி ஒப்புதலும் வழங்கியுள்ளது. இதேபோன்று, நாட்டில் பனாசியா பயோடெக் நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணியை முன்பே தொடங்கி விட்டது.  இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் கொரோனா தடுப்பூசியானது கிடைக்கப்பெற்று வருகிறது.

இதனையடுத்து, தற்போது டெல்லி, விசாகப்பட்டினம், பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா, பட்டி, கோலாப்பூர், மிர்யலகுடா ஆகிய 9 நகரங்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டை விரிவுபடுத்தி உள்ளது.

Related Stories: