தேனியில் மிலிட்டரி கேன்டீனில் மது வாங்க அலைமோதும் கூட்டம்!: கொரோனா தொற்று பரவும் அபாயம்..!!

தேனி: தேனியில் மிலிட்டரி கேன்டீனில் மது வாங்குவதற்கு சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அந்நஞ்சி விலக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது ராணுவ அங்காடி. இங்கு ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் குடும்பத்தினருக்கு மட்டும் பயன்பெறும் வகையில் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்கள் மட்டுமின்றி மதுவும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் இன்று காலை மதுவிநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து மதுபாட்டில்கள் வாங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடினர். அதிலும் ஓய்வுப்பெற்ற ராணுவத்தினர் குடும்பத்தினர் கூட்டமாக திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக கொரோனா தொற்று வேகமாக பரவும் ஆபத்து இருப்பதாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். 

Related Stories:

>