சன் நியூஸ் செய்தி எதிரொலி: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி நிற வள்ளுவர் படம் அகற்றம்..!!

கோவை: சன் நியூஸ் செய்தி எதிரொலியாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி உடை தரித்தவாறு இருக்கும் திருவள்ளுவர் புகைப்படம் தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. எந்த குறிப்பிட்ட மதத்தையும் சாராமல் உலகம் யாவுக்கும் உரியவராக அடையாளப்படுத்தப்படும் நோக்கிலேயே வெள்ளை உடையுடன் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இவ்வாறு இருக்க கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் போது காவி உடையில் திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக சன் நியூஸில் செய்தி வெளியானது. இந்நிலையில்,  காவி உடை தரித்தவாறு இருக்கும் வள்ளுவரின்  புகைப்படத்தை நீக்கிவிட்டு பொதுவான வெள்ளை உடையில் இருக்கும் வள்ளுவர் படம் வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் 2017 - 2018ம் ஆண்டு அதிமுக அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார். 

Related Stories:

>