முக்கிய செய்தி சென்னை டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்: முதல்வர் அறிவிப்பு Jun 17, 2021 டெல்டா மாவட்டம் முதல் அமைச்சர் சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12.06.2021 அன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் உயர்மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில், ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து ஆணையிட்டுள்ளார். இந்த குறுவை சாகுபடி உதவி தொகுப்பு திட்டமானது, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில், முதல்வரின் உத்தரவின்படி, சிறப்புக் கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்து, பல்வேறு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து, டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடி மதிப்பீட்டில் 4,061.44 கி.மீ. தூரத்திற்கு 647 தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.11.06.2021 அன்று, திருச்சி கல்லணையில் ரூ.1,036 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து, பின்னர், 12.06.2021 அன்று குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் திறந்து வைத்தார். கல்லணையிலிருந்து 16.06.2021 அன்று காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 16.06.2021 அன்றைய நிலவரப்படி, 94.26 அடி (57.656 டிஎம்சி) நீர் இருப்பில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தொடர்ந்து காவிரியில் மாதந்தோறும் உரிய அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், எதிர்வரும் 22.06.2021 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.2 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்புக் குறுவைப் பருவத்தில் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களைப் போதிய அளவு இருப்பில் வைத்திடவும், நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு, விரைவாக நடவுப்பணியை மேற்கொள்ளவும் வேளாண்மைத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு மேற்கொண்டுவரும் இத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக, 14.06.2021 வரை, 1,69,300 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, நெல் நாற்றங்கால் விடும் பணியும் நடவுப் பணியும் நடைபெற்று வருகிறது.டெல்டா மாவட்ட விவசாயிகள், குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக, 2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், 1,90,000 ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள், 24,000 ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும். இதற்காக, அரசு ரூ.50 கோடி நிதியினையும், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கவும், நீரைத் திறம்படச் சேமித்து பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தும் வகையில், பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், ரூ.11.09 கோடி நிதியினையும் வழங்கி, ஆக மொத்தம் ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தைத் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து ஆணையிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவர். எனவே, நடப்பாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், ரூ.61.09 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் காரணமாகவும், குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் இந்த ஆண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் : அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜர்!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்