13 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்; புதிய நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே

சென்னை: பெரும்பாலான ரயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எழும்பூர்-ராமேசுவரம் தினசரி சிறப்பு ரயில் (02205) அதிகாலை 4.20 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும். கொல்லம்-எழும்பூர் தினசரி சிறப்பு ரயில் (06724) கோவில்பட்டிக்கு இரவு 8.53 மணிக்கும், சாத்தூருக்கு இரவு 9.13 மணிக்கும் வரும். எழும்பூர்-தூத்துக்குடி தினசரி சிறப்புரயில் (02693) தூத்துக்குடி ரயில் நிலையத்தை காலை 6.40 மணிக்கு வந்தடையும். எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு ரயில் (02661) காலை 8.25 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும். திருநெல்வேலி-பாலக்காடு தினசரி சிறப்பு ரயில் (06791), திருப்பதி- ராமேசுவரம் வாரம் 3 முறை சிறப்பு ரெயில் (06779) உள்பட 13 சிறப்பு ரெயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்கள், புறப்பாடு அல்லது வருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி-மைசூர் இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06235) தினசரி மாலை 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். சாத்தூர் ரயில் நிலையத்திற்கு மாலை 6.03 மணிக்கு வரும். ஜூன் 18-ந் தேதி முதல் ஒகா-தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் (09568) தூத்துக்குடி நிலையத்தை அதிகாலை 4.40 மணிக்கு வந்தடையும். பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்தை கொண்டு ரயில்களின் நேரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Related Stories:

>