கேரளாவில் தொற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிப்பு!: 2 மாதத்திற்கு பிறகு பேருந்து போக்குவரத்து தொடக்கம்..மதுபான கடைகளை திறக்கவும் அனுமதி..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சில மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பேருந்து போக்குவரத்து துவங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்திருப்பதை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கேரள அரசு அறிவித்திருக்கிறது. 8 முதல் 20 சதவீதம் பாதிப்பு இருக்கும் மாவட்டங்களை A எனவும் 20 முதல் 30 சதவீதம் பாதிப்பு இருக்கும் பகுதிகளை B  என்றும் 30 முதல் அதற்கு மேற்பட்ட பாதிப்பு இருக்கும் பகுதிகளை C  என மூன்று பகுதிகளாக பிரிந்து ஊரடங்கு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

இதையொட்டி திருவனந்தபுரம் மாவட்டத்தில் தனியார் வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்தை பொறுத்தவரையில் குறைவான பயணிகளுடன் குறிப்பிட்ட அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வணிகள் செய்யவும், மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருப்பது அம்மாநில மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Related Stories:

>