மும்பையில் மீன்கள் ஏற்றி சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது!: சாலையில் துடிதுடித்து உயிழந்த மீன்கள்..!!

மும்பை: மும்பையில் மீன்கள் ஏற்றி சென்ற வாகனம் ஒன்று விபத்தில் சிக்கி சாலையில் மீன்கள் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை மாநகரின் கிழக்கு பெரிய நெடுஞ்சாலையில் விற்பனைக்காக மீன்கள் ஏற்றி சென்ற வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் வாகனம் சாலையில் சாய்ந்ததால் மீன்கள் சாலை முழுவதும் சிதறின. இந்த விபத்தில் உயிருடன் இருந்த ஏராளமான மீன்கள் சாலையில் துடிதுடித்து உயிரிழந்தன. 

இதுகுறித்து தகவல் கிடைத்த போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தை மீட்டனர். மேலும் சாலையில் சிதறி கிடந்த மீன்களை தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். மும்பை கிழக்கு நெடுஞ்சாலையில் விபத்து நேரிட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Related Stories:

>