விளையாட்டு துளிகள்

* ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த பிபா உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்த இந்தியா, இ பிரிவில் 7 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து ஆசிய கோப்பை தொடரின் 3வது சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.

* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 891 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (886), மார்னஸ் லாபுஷேன் (ஆஸி. 878), விராத் கோஹ்லி (814), ஜோ ரூட் (797) டாப் 5ல் உள்ளனர். இந்தியாவின் ரிஷப் பன்ட் (747), ரோகித் ஷர்மா (747) 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் வரும் 28ம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விளையாட முன்னாள் சாம்பியன்கள் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) இருவருக்கும் ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா இருவரும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்ப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலிய அணியின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்து வார்னர், கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் விலகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் ஏகார், வெஸ் ஏகார், ஜேசன் பெஹரண்டார்ப், அலெக்ஸ் கேரி, டேன் கிறிஸ்டியன், ஜோஷ் ஹேசல்வுட், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், ரைலி எரிடித், பென் மெக்டெர்மாட், ஜோஷ் பிலிப், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேடு, ஆடம் ஸம்பா.

Related Stories:

>