நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரியாக 1.85 லட்சம் கோடி வசூல் : கடந்த ஆண்டை விட இரட்டிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரியாக 1.85 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து இந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை நிகர நேரடி வரியாக 1,85,871 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டில் 92,762 கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் வரி வசூல் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. வரி ரீபண்டாக இதுவரை 30,731 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்த வரி வசூல் முந்தைய ஆண்டை விட 57 சதவீதம் உயர்ந்து 2.16 lakh கோடியாக உள்ளது.

இதில் 28,780 கோடி முன்கூட்டிய வரியாகவும், டிடிஎஸ் ஆக 1.56 லட்சம் கோடியாகவும், சுய மதிப்பீட்டு வரி 15,343 கோடியாகவும் உள்ளது. நிறுவன வரி 96,923 கோடி, தனி நபர் வரி 1.19 லட்சம் கோடியாக உள்ளது.  நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் வரி வசூல் மிக சவாலானதாக இருந்தாலும் இருப்பினும், முதல் காலாண்டில் முந்தைய ஆண்டை விட 146 சதவீதம் அதிகமாக முன்கூட்டிய வரி ₹28,780 கோடி வசூலானது என வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>