2 ஆண்டாக காயத்துடன் சுற்றிய யானை பிடிபட்டது

ஊட்டி: கூடலூரில் காயத்துடன் சுற்றித்திரிந்த ‘‘சில்வர் மான்ஸ்ட்ரா’’ காட்டு யானையை கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். கூடலூர் வன கோட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினரால் ‘‘சில்வர் மான்ஸ்ட்ரா’’ என்று அழைக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக வால் பகுதியில் பெரிய காயத்துடன் சுற்றித்திரிந்து வந்தது. அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்ததால் அதை பிடித்து முதுமலையில் சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று காலை   தொரப்பள்ளி அருகே ஈப்பங்காடு பகுதியில் தனியார் காபி தோட்டத்தில் சுற்றிய யானையை இரு கும்கிகள் வரவழைக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் களமிறங்கி மயக்க ஊசி செலுத்தாமல் சுற்றிவளைத்து பிடித்தனர்.

Related Stories:

>