பெட்ரோலுடன் 20% கலக்க இலக்கு எத்தனால் உற்பத்திக்காக 78,000 டன் அரிசி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: எத்தனால் உற்பத்திக்காக 78 ஆயிரம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உணவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மாசுவை குறைப்பதற்கும், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலந்து 2025ம் ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார். இது, சர்க்கரை ஆலைகள் மூலமாகவும், தானியங்களில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தானியங்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்வதற்காக, இந்திய உணவு கழகத்தின் கையிருப்பில் உள்ள 78 ஆயிரம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘2025ம் ஆண்டுக்குள் 1,500 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 740 கோடி லிட்டர் அரிசியில் இருந்தும், 760 கோடி லிட்டர் சர்க்கரையில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

 இதனால், எத்தனால் உற்பத்திக்காக இந்திய உணவு நிறுவனத்திடம் இருந்து 78 ஆயிரம்  டன்  அரிசி, ஒரு கிலோ ₹20 என்ற மானிய விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories:

>